2026 மே 11, திங்கட்கிழமை

dd

லேண்ட் ரோவர் வாகனம் மீட்பு

Simrith   / 2024 டிசெம்பர் 01 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொல்கசோவிட்ட பகுதியிலுள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லேண்ட் ரோவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹரகம பௌத்த விகாரை ஒன்றின் பிரதம பிக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பழைய லேன்ட் ரோவர், சேஸிஸ், நான்கு டயர்கள், இயந்திரம் என்பனவற்றை கையளித்துள்ளதாக கராஜ் உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாகனத்தை அசெம்பிள் செய்வதற்குத் தேவையான கார் பாகங்களையும் பிக்கு அவ்வப்போது கொண்டு வந்ததாக உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மஹரகம பௌத்த விகாரையின் பிரதம பிக்குவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக கெஸ்பேவ பொலிஸார் குறித்த வாகனத்தைக் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .