Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.
வானிலிருந்து நுவரெலியாவின் அழகை ஐந்து நிமிடங்கள் ஹெலிகெப்டரில் சுற்றிப்பார்க்க, 15,700 ரூபாய் உல்லாசப்பயணிகளிடம் அறவிடப்படுகிறது.
நுவரெலியாவில் ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகள் களைக்கட்டியுள்ள நிலையில்,நுவரெலியாவின் அழகை வானிலிருந்து கண்டு மகிழ, நுவரெலியாவில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் ஒன்று இரண்டு ஹெலிகெப்டர்களை சேவையில் ஈடுப்படுத்தியுள்ளது.
ஒரு ஹெலிகெப்டரில் அறுவர் பணிக்கக் கூடிய வகையில், ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் ஹெலிகெப்டரில் ஒரு பயணியிடம் 15700/=ரூபாய் பயணக்கட்டணமாக அறவிடப்படுகிறது.
அந்த வகையில் அறுவர் கொண்ட குழு ஒருமுறை பயணிக்க 94,200 ரூபாய் அறவிடப்படுகிறது.
காலை 09 மணியலவில் ஆரம்பிக்கப்படும் இந்த சேவை மாலை வரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நுவரெலியா கிரேகரி தெப்பக்குள பகுதியில் ஆரம்பமாகும். இச்சேவை நுவரெலியா நகர்,பிதுறுதாலகால மலைசிகரம் ,மற்றும் அம்பேவெல பகுதிவரை ஐந்து நிமிடம் ஒருமுறை வட்டமிட்டு வந்திறங்கவே இந்த தொகை அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
54 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
54 minute ago
2 hours ago
3 hours ago