2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

சபை அமர்வு குறித்து நாளை முடிவு

Editorial   / 2021 ஜனவரி 12 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர்களில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, பாராளுமன்ற வளாகத்தில் கிருமி தொற்றுநீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, பாராளுமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க​ தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில், சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி உரிய ஆலோசனைகளைப் பெற்றிருப்பதாகவும், கொவிட்- 19 நோய்த் தொற்றுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றிருந்த சகல இடங்களையும் கிருமி நீக்கத்துக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பணியாளர்கள் எழுமாறாகத் தெரிவுசெய்யப்பட்டு பி.சி.ஆர் (PCR) பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்த அவர், சுகாதார வழிகாட்டல்களைக் கடுமையாகப் பின்பற்றி, கடமைகளை முன்னெடுத்து வருவதாகவும், இந்த நிலைமையைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருப்பதாகவும் தஸநாயக்க குறிப்பிட்டார்.

அதேநேரம், அடுத்த பாராளுமன்ற அமர்வுகளின் செயற்பாடுகள் குறித்துத் தீர்மானிக்கும் நோக்கில், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை 13ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்குக் கூடவுள்ளது என்றும் அப்பிரிவு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .