Freelancer / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 1947 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உதயமாகின. இந்த பிரிவினையின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் சுமார் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர். சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.
இதை நினைவுகூரும் வகையில் ஓகஸ்ட் 14 ஆம் திகதி, பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில்,
இந்த தினம் இந்திய வரலாற்றில் மிகவும் துயரமான நாள் ஆகும். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் துன்பம், வேதனைகளை அனுபவித்தனர். கற்பனைக்கு எட்டாத வகையில் மிகப் பெரிய இழப்புகளை எதிர்கொண்டனர்.
எனினும் தாங்க முடியாத வலி, வேதனையை மக்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டனர். வீழ்ச்சியில் இருந்து எழுச்சி பெற்ற மக்கள், வளர்ச்சிப் பாதையில் பல்வேறு மைல்கற்களை எட்டி புதிய சாதனைகளை படைத்தனர். இந்த நாள் நமக்கு ஒரு படிப்பினையை கற்றுத் தருகிறது. நாம் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும். இதன்மூலமே நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். (a)
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago