J.A. George / 2021 ஜனவரி 15 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போக்குவரத்து அபராத கட்டணங்களை செலுத்த வழங்கப்பட்ட சலுகைக்காலம் இன்று(15) நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்ப, போக்குவரத்து தவறுக்கான அபராத கட்டணங்களை 14 நாட்கள் மற்றும் மேலதிக அபராக கட்டணங்களை 28 நாட்களுக்குள் தபால் மற்றும் உபதபால் நிலையங்களில் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கொழும்பு மாநகராட்சி போக்குவரத்து பொலிஸ் பிரிவினராலும், பொலிஸ் அவசரகால பதிலளிப்பு பிரிவினராலும் வழங்கப்பட்ட அபராத பத்திரங்களுக்கான கட்டணங்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் வேண்டுகோளுக்கமைய இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026