Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மாலபேயிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தின் (சைட்டம்) பிரதான நிறைவேற்று அதிகாரியான (சீ.ஈ.ஓ) டொக்டர் சமீர சேனாரத்னவைப் படுகொலை செய்வதற்கு எடுத்த முயற்சி தொடர்பில், 3 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன” என, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
முல்லேரியா பொலிஸார் மற்றும் மிரிஹான விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் உள்ளிட்ட குழுவினரே இந்த விசாரணையை முன்னெடுக்கின்றது.
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்து, மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவரால், செவ்வாய்க்கிழமை இரவு 8:30 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
சம்பவத்தில் அவருக்கு காயமோ அல்லது உயிருக்கு எவ்விதமான ஆபத்துகளோ, ஏற்படவில்லை என்றாலும் அவருடைய காரின் முன்பக்கம்; மற்றும் பின்பக்க கதவில் நான்கு இடங்களில், துப்பாக்கிச் சன்னங்கள்; துளைத்துச் சென்றுள்ளன.
சைட்டம் நிறுவன பிரதான கட்டடத்திலிருந்து சுமார் 700 மீற்றருக்கு அப்பால் உள்ள சந்திரிகா குமாரதுங்க மாவத்தைக்கு அண்மையில் வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
பிரதான நிறைவேற்று அதிகாரியான டொக்டர் சமீர சேனாரத்ன, தன்னுடைய கடமைகளை முடித்துகொண்டு, ராஜகிரியவில் உள்ள தன்னுடைய வீட்டைநோக்கிப் பயணித்துகொண்டிருந்த போதே, இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அண்மையில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும், சி.சி.ரி.வி கமெராக்களில் பதியப்பட்டுள்ள காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஸ்தலத்துக்கு நேற்று (07) சென்றிருந்த அரச இரசாயன சிரேஷ்ட பகுப்பாய்வாளர் பி.ஜி.மடவல, காரை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தினர். முல்லேரியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதியாரி ஆர்.சி. ஹெட்டியாராச்சி உள்ளிட்ட உயரதிகாரிகளும் ஸ்தலத்துக்கு விரைந்து பார்வையிட்டனர்.
12 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
6 hours ago
7 hours ago