Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 14 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தின் (சைட்டம்) பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவின் கார் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூடு தொடர்பில் அவர் வழங்கிய வாக்குமூலங்களில் முரண்பாடு காணப்படுவதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டில், சந்தேகம் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலைமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர், இச்சம்பவம் தொடர்பாக அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைக்குக் காத்திருப்பதாகவும், அந்த அறிக்கையின்றி எதையும் கூற முடியாதெனவும் குறிப்பிட்டார். எனினும், டொக்டர் சேனாரத்னவால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலங்களில் உறுதியற்ற தன்மைகள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான கண்காணிப்புக் கெமராவின் காட்சிகளை, பொலிஸார் இன்னமும் ஆராய்ந்துவருவதாகத் தெரிவித்த அவர், இதுவரையில் எவரும் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் கருத்துத் தெரிவித்த அரச பகுப்பாய்வுத் திணைக்களம், இச்சம்பவம் தொடர்பான அறிக்கை, இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வழங்கப்படுமெனத் தெரிவித்தது.
அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன்பாக, சில ஆதாரங்களைப் பெற வேண்டியுள்ளதாகத் தெரிவித்த திணைக்களத்தின் அதிகாரியொருவர், அவற்றைக் கையளிக்குமாறு பொலிஸாரிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
டொக்டர் சேனாரத்னவின் கார் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இம்மாதம் 6ஆம் திகதி நடத்திய தாக்குதலில், அவருக்குக் காயம் ஏற்படவில்லை. எனினும், காரின் முன்பக்கக் கண்ணாடிக்குச் சேதம் ஏற்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, அவரது காரும் அவரது உடைகளும், அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதோடு, டொக்டர் சேனாரத்னவுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
48 minute ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
7 hours ago
7 hours ago