2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘ஜனாதிபதியின் முடிவு தவறு’

Editorial   / 2018 நவம்பர் 19 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.நிரோஸ் 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தவறு எனவும், நாடாளுமன்றத்தைக் கலைக்காதிருந்தால், பிரதமர் மஹிந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்திருக்கு முடியும் எனவும் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன வி​​ஜேசேகர தெரிவித்துள்ளார். 

பிரதமர் அலுவலகத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

நாடாளுமன்றம் கலைத்த பின்னர் 9ஆம் திகதிக்கும் 14ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக கிராம மட்டங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்ட என்று தெரிவித்த அவர், இந்தப் போராட்டங்களின்போது சஜித் பிரேமதாஸவை, அக்கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .