2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஜனாதிபதி மாளிகை பணம் தொடர்பில் அறிக்கை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 12 , பி.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் கையளித்த ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிக பணம் தொடர்பான  அறிக்கை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பணத்தொகையை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தாமதம் ஏற்பட்டமை தொடர்பிலான அறிக்கையை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று (12) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவின் இயக்குநர் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.எஸ். விக்ரமசிங்க  இந்த சம்பவம் தொடர்பான தொலைபேசி அழைப்பு விவர அறிக்கைகளை பெற்று விசாரணைகளை மேற்கொண்டதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X