S.Renuka / 2026 ஏப்ரல் 06 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க., சசிகலா-டாக்டர் ராமதாஸ் அணி என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் போட்டி களத்தில் குதித்துள்ள வேட்பாளர்கள் வீதிவீதியாக சென்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் கடந்த மாதம் 31ஆம் திகதி தொடங்கினார். அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாகனம் (பஸ்) மூலம் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ஆம் திகதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா (விருத்தாசலம்) உள்ளிட்ட வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனர். காங்கிரஸ் மற்றும்
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026