Freelancer / 2025 ஜூலை 27 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பட்ட தமிழகம் என்ற கனவுக்கு உறுதிபூண்டுள்ளோம். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தமிழகத்துக்கு கிடைத்த நிதியை விடவும், மூன்று மடங்கு கூடுதல் நிதியை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கியுள்ளது என்று தூத்துக்குடியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய மேம்படுத்தப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு திறந்து வைத்தார். 4,874 கோடி ரூபா மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கலும் நாட்டினார். பிரிட்டன் மற்றும் மாலைதீவு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, இந்த திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ‘வணக்கம்’ என தமிழில் சொல்லி தனது உரையை தொடங்கினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பட்ட தமிழகம் என்ற கனவுக்கு உறுதிபூண்டுள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாவை மத்திய அரசு அளித்திருக்கிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தமிழகத்துக்கு கிடைத்த நிதியை காட்டிலும் மூன்று மடங்கு கூடுதல் நிதியை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கியுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. முதன்முறையாக கரையோர மீன்பிடி துறைமுகங்களுக்கு இத்தனை கரிசனத்தையும் அக்கறையையும் யாரும் வெளிப்படுத்தவில்லை. உங்களிடம் கரைபுரண்டு ஓடும் உற்சாகத்தை காண்கிறேன் என்றார். (a)

1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago