2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தலையைக் குனிந்து கொண்டேன்: சைட்டம் சீ.ஈ.ஓ

Thipaan   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

“என்னுடைய காரின் முன்பக்கக் கண்ணாடியின் மீது கல்லொன்று வந்து விழுந்ததைப்போல இருந்தது. நிலைகுலைந்து போனேன். எனினும், சுதாகரித்துக்கொண்டு பார்த்தபோது, மோட்டார் சைக்கிளில் இருந்தவர்களில் ஒருவர் ஏதோ எடுத்தார். அச்சமடைந்த நான், தலையைக் குனிந்துகொண்டேன்” என்று மாலபேயிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தின் (சைட்டம்) பிரதான நிறைவேற்று அதிகாரியான (சீ.ஈ.ஓ) டொக்டர் சமீர சேனாரத்ன தெரிவித்தார்.  

சைட்டம் நிறுவன பிரதான கட்டடத்திலிருந்து சுமார் 700 மீற்றருக்கு அப்பால் உள்ள சந்திரிகா குமாரதுங்க மாவத்தைக்கு அண்மையில் வைத்து, தன்னுடைய காரின் மீது செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

“கடமையை முடித்துக்கொண்டு, என்னுடைய காரைச் செலுத்தி வந்தபோது, குறுக்காக மோட்டார் சைக்கிளொன்று, அதுவும் தவறான பக்கத்தின் ஊடாக வந்துநின்றது. நான் செலுத்திச் சென்ற காரையும் உடனடியாக நிறுத்திவிட்டேன். என்னுடைய காரின் மீது கல்லொன்று வந்துவிழுந்ததைப் போல இருந்தது. 

சைக்கிளில் இருந்தவர். ஏதோவொன்றை எடுத்தார். அது துப்பாக்கிப் போலவே இருந்தது. அச்சமடைந்த நான், தலையை குனிந்துகொண்டேன். அதற்கு பிறகு, துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. அவ்வளவுதான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் யாரென்று எனக்குத் தெரியாது” என்றார். 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த 31ஆம் திகதியன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அடுத்த நாளிலிருந்து எனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X