2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தியத்தலாவையில் இருந்த 33 பேரும் இன்று வீடு திரும்புவர்

Editorial   / 2020 பெப்ரவரி 14 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் வுஹானிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தியத்தலாவை இராணுவ முகாமில்  தங்கவைக்கப்பட்ட 33 பேர், இன்று (24) தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த 33 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட வைத்தி பரிசோதனைகளின் போது, எவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என்று தெரியவந்தது.

இந்த நிலையில், அவர்கள்  தியத்தலாவை இராணுவ முகாமிலிருந்து அக்குரேகொட இராணுவ முகாமுக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பின்னர், அவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .