2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தெரு நாய்களைப் பாதுகாக்கும் பிரிட்டன் டாக்டர்

Gavitha   / 2017 ஜனவரி 23 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர், இலங்கையிலுள்ள தெரு நாய்களைப் பாதுகாத்து வருகின்றார்.

பிரித்தானியாவின் பர்னார்ட் கோட்டை, துர்ஹாம் என்ற பகுதியைச் சேர்ந்த ஜெனி லோவஸ் என்ற பெண் கால்நடை மருத்துவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாத்து வருகின்றார்.

இலங்கையில், சுமார் மூன்று மில்லியன் தெரு நாய்கள் உள்ளன. அவற்றில் 60 சதவீதமான நாய்க்குட்டிகள், வயது வரும்வரை உயிரோடு இருப்பதில்லை.

இலங்கையின் தெற்குப் பகுதியிலுள்ள தலல்ல என்ற இடத்தில், விலங்குகள் வைத்தியசாலையொன்றை அவர் நிர்மாணிக்கவுள்ளதாகவும் அதற்கான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக, உலகம் முழுவதிலிருந்தும் நிதி சேகரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .