2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நடிகர் மம்முட்டி இலங்கை வருகிறார்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய திரைப்பட முன்னணி  நடிகர் மம்முட்டி அடுத்த வாரம் ஒரு திரைப்பட படப்பிடிப்புக்காக இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டி 35 வருடங்களுக்குமேல் தமிழ் மலையாளம் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த பிரபலமான ஒருவராவார்.  

கண்டியிலுள்ள கடுகன்னாவ உள்ளிட்ட நான்கு இடங்களில் படமாக்கப்படவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு இலங்கையில் இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் திரைப்படத் தயாரிப்புக்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் இலங்கை சுற்றுலாத் தூதுவர் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய ஆகியோரும் அவரைச் சந்திப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X