Editorial / 2019 ஒக்டோபர் 06 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கதிர்காமத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், “இலங்கை இராணுவமானது, கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் தேசிய பாதுகாப்பு சபையை கூட்டி நாட்டின் பாதுகாப்பு நிலை தொடர்பில் ஜனாதிபதி தேடிப் பார்க்கின்றார்.
அதற்கமைய, அனைத்து படைகளின் பிரதானிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது” என்று இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளார்.
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026