J.A. George / 2021 மே 04 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையை அடுத்து, நாட்டில் மேலும் சில பகுதிகள் இன்று(04) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா, கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய 5 மாவட்டங்களின் 9 கிராம சேகர் பிரிவுகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல்ஷ வேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில், நோர்வூட் பொலிஸ் அதிகார பிரிவில், இன்ஜஸ்றி கிராம சேவகர் பிரிவும், ஹட்டன் போடைஸ் தோட்டம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கடவத்தை பொலிஸ் அதிகார பிரிவின் எல்தெனிய தேவாலய வீதி மற்றும் ரணவிரு தர்மசிறி மாவத்தை ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தின் கங்குல்விட்டி கிராம சேவகர் பிரிவும் பொத்துபிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவும் கலவான பொலிஸ் அதிகார பிரிவலின் ஹப்புகொட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் போம்புவல கிராம சேவகர் பிரிவும் மொரட்டுமுல்ல பொலிஸ் அதிகார பிரிவின் வில்லோர தோட்டம் என்பனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago