Freelancer / 2022 ஜனவரி 09 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு தென்கிழக்காக கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்துள்ளதால், ஜனவரி 10ஆம், 11ஆம் திகதிகளில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
12 minute ago
24 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
20 Mar 2026
20 Mar 2026