Freelancer / 2021 ஜூலை 24 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் பிற நிகழ்வுகள் இன்று முதல் (24) பொதுச் சுகாதார ஆய்வாளர்களால் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறினால், அதற்காக நிகழ்வு அமைப்பாளர்கள் மற்றும் நிகழ்வு மண்டப உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 2,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சங்கம் எச்சரிக்கின்றது.
மண்டபத்தில் 25% க்கு அதிகமாக கூட்டம் இருக்கக்கூடாது என்ற விதிமுறைக்கினங்கவே திருமணங்களையும் பிற செயல்பாடுகளையும் நடத்த நாங்கள் அனுமதி அளித்தோம்.
இருப்பினும், சுகாதார ஆலோசனையை மீறி பல திருமணங்கள் நடத்தப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்களுடன் அறிக்கைகள் உள்ளன.
அத்தகைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பொது சுகாதார ஆய்வாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று சங்கம் தெரிவித்துள்ளது. R
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025