R.Maheshwary / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நேற்று (10) மாத்திரம் தங்க நகைகள் அபகரிப்பு கொள்ளைச் சம்பவங்கள் 5 பதிவாகியுள்ளதென்றும் நீர்கொழும்பு, ராகம, அவிசாவளை, திஸ்ஸமஹாராம, ஜாஎல ஆகிய பிரதேசங்களிலேயே இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதென்றார்.
மோட்டார் சைக்களில் வருகைத் தந்தே நகைகளை அபகரிப்பதாகவும் இச்சம்பவங்கள் குறித்து இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதென்றார்.
எனவே வர்த்தக நிலையங்கள், வீதிகளில் பயணிக்கும் போது அவதானமாக இருக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.
3 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Apr 2026