Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 21 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணமான பெண்ணொருவருடன், தவறான தொடர்புகளைப் பேணி வந்து, அப்பெண்ணிடமிருந்து, 50 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாயை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (21), காலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பொலிஸ் நிலையத்துக்கு இணையாக சேவையாற்றிவரும், 34 வயதுடைய கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கான்ஸ்டபிள், வந்துரப பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய காலத்தில், அப்பகுதியைச் சேர்ந்த மூன்றுப் பிள்ளைகளின் தாய் ஒருவருடன் தொடர்புகளைப் பேணி வந்திருந்ததாகவும், அச்சமயம் அப் பெண்ணிடமிருந்து அவ்வப்போது பணம் பெற்று வந்துள்ளாரெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
3 hours ago