Freelancer / 2026 ஏப்ரல் 18 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்காக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு அருட்தந்தை ரொஹான் டி சில்வா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சமூக மற்றும் சமய மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'நினைவு, வலி மற்றும் நம்பிக்கை: 7 ஆண்டுகளின் பின்னர் நீதியைத் தேடி' எனும் நிகழ்வில் இதை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அருட்தந்தை ரொஹான் டி சில்வா,
"தாக்குதல் இடம்பெற்று 7 ஆண்டுகளின் பின்னர் விசாரணைகள் ஒரு சாதகமான திசையை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது. எனவே, விசாரணைகளை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டியுள்ளது.
சர்ச்சைக்குரிய சாய்ந்தமருது சம்பவங்கள் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்த தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை, விசாரணைகள் நிறைவடையும் வரை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்தார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .