Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 12 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கழுத்தில் பாம்பை சுற்றிக் கொண்டு அதன் வாயிலும் மதுவை ஊற்றி, அதற்கு முத்தம் கொடுத்து நடுரோட்டில் சுற்றிய இளைஞரைக் கண்டு அருகிலிருந்தோர் தெறித்து ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தருமபுரி நான்கு வழிச் சாலை அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. ராஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் கழுத்தில் பாம்பைச் சுற்றிக் கொண்டு மது வாங்க அந்தக் கடைக்கு வந்தார். முதலில் அந்த பாம்பை பார்த்தவர்கள் செத்த பாம்பு என நினைத்து பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
ஆனால் சூர்யாவின் கழுத்தில் போட்டிருந்த பாம்பு நெளிந்ததை பார்த்ததும் உயிருடன் இருப்பதைக் கண்டு, மது வாங்குவதற்காக அங்கு நின்றிருந்தோர் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த இளைஞருக்கு விரைவாக மதுவைக் கொடுத்து ‘உடனே இடத்தை காலி செய்’ என்று அனுப்பி வைத்தனர்.
மது வாங்கிய சூர்யா அந்தப் பாட்டிலை தனது வாயால் திறந்து ஆறடி நீளமுள்ள சாரை பாம்புக்கு அதன் வாயில் மதுவை ஊற்றினார். பின்னர் அவர் தொடர்ந்து அரை மணி நேரம் சாரைப் பாம்புக்கு முத்தம் கொடுப்பதும், மீண்டும் மதுவை ஊற்றுவதுமாக சாலையில் அங்கும் இங்கும் நடந்து அட்டகாசம் செய்தார். மேலும் போதை தலைக்கு ஏறிய சாரைப் பாம்பை கழுத்தில் தொங்க விட்டபடி, நான்கு வழிச்சாலை பகுதியில் நடக்கத் தொடங்கினார்.
10 minute ago
25 minute ago
40 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
40 minute ago
58 minute ago