2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பிரகடனப்படுத்த அதிகாரம் இல்லை

Freelancer   / 2022 செப்டெம்பர் 24 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் பிரிவு 2க்கு அமைய, பெரிய பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்த அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அந்தப் பிரிவின் கீழ், எந்தவொரு நிலத்தையும், கட்டடத்தையும், கப்பல் அல்லது விமானத்தையும் தடைசெய்யப்பட்ட இடமாக பிரகடனப்படுத்த முடியும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பின் பல பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து, ஜனாதிபதியால் நேற்று (23) வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

அது தொடர்பில் சங்கம், இன்று (24) வெளியிட்ட ஊடக அறிக்கையில்  மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X