2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் அதிகாரிகளாக மாறவுள்ள 150 சட்டத்தரணிகள்

J.A. George   / 2021 ஜனவரி 12 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் நிலையங்களில் 150 சட்டத்தரணிகளை தலைமை இன்ஸ்பெக்டர்களாக (CI) நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு  சட்ட ஆலோசனை மற்றும் சேவைகயை மிகவும் திறமையான முறையில் முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டவுடன்  ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கிய பொலிஸ் நிலையங்களுக்கு குறித்த சட்டத்தரணிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சு  அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படும் சட்டத்தரணிகளுக்கு, பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பயிற்சியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .