Freelancer / 2025 நவம்பர் 10 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் ஒரே நாளில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, யாழ். நகரை அண்டிய பகுதிகளில் 10 பேர் ஐஸ் போதைப்பொருளுடனும், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 9 பேர் போதை மாத்திரைகளுடனும், 4 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (a)

26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago