S.Renuka / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியக் குடும்பங்களில் விவாகரத்து என்பது இன்றும் ஒரு சமூகக் களங்கமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர், தனது மகளின் விவாகரத்தை மேளதாளங்கள் முழங்க இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதியான ஞானேந்திர சர்மாவின் ஒரே மகள் பிரணிதா. இவருக்கும் இந்திய இராணுவத்தில் மேஜராகப் பணியாற்றும் கவுரவ் அக்னிஹோத்ரி என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், புகுந்த வீட்டில் பிரணிதா தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளார்.
இதனால், பிரணிதா விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
தீர்ப்பு வெளியான உடனே, நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே காத்திருந்த தந்தை ஞானேந்திர சர்மா மற்றும் உறவினர்கள், மேளதாளங்கள் முழங்க உற்சாகமாகக் கொண்டாடினர். அங்கிருந்தவர்களுக்கு லட்டுகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தக் கொண்டாட்டத்தின் போது பிரணிதாவின் குடும்பத்தினர் கருப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்தனர்.
அதில் பிரணிதாவின் புகைப்படத்துடன், "எனது மகளை நேசிக்கிறேன்; அவளே எனது இதயம், எனது ஆன்மா" என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. பிரணிதா அணிந்திருந்த உடையில் "எனது குடும்பம் எனது உயிர்" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பிரணிதா கூறுகையில், “இதுபோன்ற கடினமான காலங்களில் தோள் கொடுக்கும் எனக்கு கிடைத்த போன்ற குடும்பம் போன்று அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .