2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

’மசகு எண்ணெயை குடிக்கவே முடியும்’

Freelancer   / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மசகு எண்ணெயின் தரம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்   சட்டரீதியாக பதிலளிக்கும் என மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (26) தெரிவித்தார்.

கூட்டுத்தாபனத்திடம் போதியளவு டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பு உள்ளது என்றும் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

லக்ஷபான மின்நிலையத்தில் ஏற்பட்ட செயலிழப்பு, நீர் மின்சார முகாமைத்துவ பிரச்சினை மற்றும் 
டீசல் மற்றும் உலை எண்ணெய்க்கு போதிய நிதி இன்மை ஆகிய காரணங்களாலேயே இலங்கை மின்சார சபையால் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

தவறான வகை மசகு எண்ணெயை இலங்கை அதிகாரிகள் இறக்குமதி செய்ததால் மின்வெட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்ததையடுத்தே அமைச்சரால் மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெயில் உள்ள நாப்தாவில் அதிக அளவு கந்தகம் உள்ளதால் அதை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்த முடியாது என்றும் அதை இப்போது குடிக்கவே முடியும் என்றும் அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X