Editorial / 2021 ஜூன் 30 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து வருகை தரும் விமானப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை, நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது.
“ கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமன், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கே நிபந்தனைகளுடனான அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார்.
இந்த அனுமதி இன்று (30) முதல் வழங்கப்பட்டுள்ளது என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் கூறினார்.
இலங்கை தூதரகத்தினால் அனுமதி வழங்கப்பட்ட நிலையங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறில்லையெனின் குறித்த நாடுகளின் விமான நிறுவனங்கள் அனுமதி வழங்கிய நிலையங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகள் எடுக்கப்படல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14 minute ago
41 minute ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
41 minute ago
20 Dec 2025
20 Dec 2025