2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மத்திய கலாசார நிதியச் சட்டம் மீறப்பட்டுள்ளது

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018 – 2019 காலப்பகுதியில் தொல்பொருள்  திணைக்களத்தின் பணியாளர்களாக   3000க்கும் மேற்பட்டவர்கள்  இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய கலாசார நிதியச் சட்டத்தை மீறி, இவ்வாறு அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வு  அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய, இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அதிகாரிகளின் சம்பளத்துக்காக  106 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

குறித்த நியமனங்கள் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே, இதற்கு பொறுப்பான அமைச்சராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X