2025 ஒக்டோபர் 13, திங்கட்கிழமை

மேலும் 400பேருக்கு தொற்று; 11,744 ஆக உயர்வு

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 04 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலானது, நேற்று சுமார்  409 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, மொத்தமாக  11ஆயிரத்து 744ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 இவர்களில் எட்டுப் பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்பதுடன் ஏனைய 401 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, மினுவங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்து 266ஆக அதிகரித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X