Freelancer / 2021 நவம்பர் 24 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, முகக்கவசங்களை சரியாக அணியாத சுமார் 10,000 பேருக்கு பொலிஸார் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மேல் மாகாணத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
சரியாக முகமூடி அணியாத 9,658 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், முகக்கவசம் அணியாத 4,351 பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தினமும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago