Janu / 2025 ஜூன் 17 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024 அரையாண்டு சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய, இலங்கையில் 2.7 மில்லியன் பேர் முதியோர் சமூகத்தவராவர். 2052 ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் 60 வயதைக் கடந்தவர்களின் சனத்தொகை 24.8மூ சதவீதம் வரை அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் அலுவலகம் ஊகித்துள்ளது.
அதனால், "வளமான நாடு அழகான வாழ்வு” எனும் அரசின் தேசிய கொள்கைப் பணிச்சட்டதத்தின் கீழ் "மதிப்பு மிகுந்த சிரேஷ்ட பிரஜை அர்த்தமுள்ள ஓய்வு காலம்" எனும் நோக்கத்தை அடைவதற்கு இயலுமாகும் வகையில் முதியோர்களுக்கு சமூக, பொருளாதார, உடலியல் மற்றும் ஆன்மீக ரீதியாக திருப்திகரமாக வாழ்வதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதற்காக 2000 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
29 Mar 2026
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Mar 2026
29 Mar 2026