J.A. George / 2021 மே 21 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 மாவட்டங்களைச் சேர்ந்த 28 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட கெஸ்பேவ தெற்கு, மாகன்தன கிழக்கு, தம்பே, பட்டகெத்தர வடக்கு, மடபாத்த, ஹல்பிட்ட, கெஸ்பேவ கிழக்கு, மாகன்தன மேற்கு, நிவுன்கம, பொல்ஹேன, ஹென்னந்தர தெற்கு மற்றும் வடக்கு, தல்தர கிழக்கு மற்றும் மேற்கு நிவந்திடிய, மாம்பே மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மகரகமை பொலிஸ் அதிகார பிரிவுக்குட்பட்ட அரவல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் மஹபாகே பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குபட்ட மகுல் பொகுன கிராம சேவகர் பிரிவும் வத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்தை தெற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தின் மீகஹாதன்ன பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட வலல்லாவிட்ட தெற்கு, மாகலந்துவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கேகாலை மாவட்டத்தின் புளத்கோபிட்டிய பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட உடபொத்த மற்றும் கென்தாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் கொஸ்வத்த பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட மத்திய கிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவும் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டி பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நவமெதகம கிராம சேவகர் பிரிவின் நவமெதகம உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago