2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

ரக்ன லங்கா விவகாரம்: முன்னாள் தளபதிகள் இருவருக்கு அழைப்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 26 , மு.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரக்ன லங்கா தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு, முன்னாள் கடற்படைத் தளபதிகள் இருவருக்கு, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால்  மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதிகளான ஜயந்த பெரேரா மற்றும் ஜயநாத் கொலம்பகே ஆகிய இருவரையும் இன்று வியாழக்கிழமை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன, சர்ச்சைக்குரிய அவன்ட் காட் நிறுவனத்தின் பெயர்ப்பதிவு செய்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு குறித்த ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, முன்னாள் கடற்படைத் தளபதி சோமதிலக திஸாநாயக்கவும் இந்த விவகாரம் தொடர்பில் சாட்சியம் பதிவுசெய்துகொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .