2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ராகமவில் கைக்குண்டு மீட்பு

Nirosh   / 2022 செப்டெம்பர் 26 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்​வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரை வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி ராகம - வல்பொல பிரதேசத்தில் உள்ள மூன்று வீடுகளுக்கு சென்று கூரிய வாள், கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய, ராகமவில்  கைக்குண்டை பொலிஸார் மீட்டுள்ளனர். 

இதேவேளை பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபர் மீது வெலிசர, நீர்கொழும்பு, கம்பஹா ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X