2026 ஜனவரி 24, சனிக்கிழமை

ரிஷாட் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

J.A. George   / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், அவரது மனைவி  மற்றும் அவரது தந்தை ஆகிய சந்தேக நபர்கள் 3 பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் இன்று(06) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் வழக்கு தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கு அழைத்து வந்த தரகர் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X