Editorial / 2021 மே 02 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியாவில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா பம்பைமடு இராணுவமுகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 15 பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மற்றும் தென்பகுதிகளை சேர்ந்த பலர் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு நேற்று (01) பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்ததுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் முடிவுகளின் அடிப்படையில் 15 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரிபிரிவு மற்றும் செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரிபிரிவு, வவுனியா வைத்தியசாலை ஆகியவற்றில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 6 தொற்றாளரகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
18 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
54 minute ago
1 hours ago