Nirosh / 2021 நவம்பர் 18 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பில் விபச்சாரவிடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட, மட்டு மாநகரசபையின் முன்னாள் மேயர் சிவகீர்த்தா, 50 ஆயிரம் ரூபாயை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (17) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்னாள் அமைந்திருந்து முன்னாள் மாநகரசபை மேயரான சிவகீர்த்தாவின் வீட்டுடன் நடாத்திவந்த தங்குவிடுதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியை, கடந்த 2016ஆம் ஆண்டு பொலிசார் முற்றுகையிட்டிருந்தனர்.
இதன்போது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள், விடுதியை நடாத்திவந்த முன்னாள் மேயர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட மேயருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகாத நிலையில், 03 மாதங்களின் பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் கடந்த 4 வருடகால வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

34 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago