2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2019 ஜனவரி 14 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மார்ச் மாதம் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இன்றைய தினம் குறித்த வழக்கு மேல்நீதிமன்ற நீதியரசர் பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இந்த வழக்கின் சாட்சிகளுக்கு அமைய தனியார் வங்கியில் உள்ள கணினி கட்டமைப்பை பரிசோதனை செய்வதற்கு பிரதிவாதி தரப்பு இடமளிக்கப்பட வேண்டுமென இதற்கு முன்னர் நீதிமன்றம் ஊடாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான அனுமதியை வழங்க குறித்த வங்கி மறுப்புத் தெரிவிப்பதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றில் இன்று அறிவித்தார்.

எனவே இந்த விசாரணைகளுக்காக குறித்த வங்கிக்கு விசேட உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கோரிக்கை விடுத்தது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதியரசர் குறித்த கணினி கட்டமைப்பை பரிசோதனை செய்வதற்காக மனுதாரர் தரப்பினருக்கு அனுமதி வழங்குமாறு வங்கித் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இந்த வழக்கை மார்ச் மாதம் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாகவும் அறிவித்தார்.

விமல் வீரவன்ஸ அமைச்சராகக் கடமையாற்றிய கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2014ஆணம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் தனது உத்தியோகப்பூர்வ வருமானத்தை மீறி 75 மில்லியனுக்கு அதிகமான சொத்துக்கள், பணத்தை ஈட்டியமை மூலம் இலஞ்ச சட்டத்தின் கீழ் குற்றமெனத் தெரிவித்து விமல் வீரவன்ஸவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினர் வழக்குத் தாக்கல் ​செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X