Editorial / 2021 மே 19 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய கொரோனா தொற்றின் காரணமாக, விமானப்பயணிகள் நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
நாளை 21ஆம் திகதி இரவு 11:59 மணிமுதல், மே மாதம் 31ஆம் திகதி இரவு 11:59 மணிவரையிலும் இத்தடை அமுலில் இருக்கும். இக்காலப்பகுதியில் எந்தவொரு விமானப் பயணியும் நாட்டுக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்காது
இது தொடர்பிலான அறிவிப்பை, சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ, நேற்று (19) விடுத்தார்.
“எனினும், மேலே குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள், நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானப் பயணிகளுக்கு எவ்விதமான தடையும் இல்லை” என்றார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago