2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வாக்காளர் எண்ணிக்கை, 2 இலட்சத்தால் அதிகரிப்பு

Niroshini   / 2017 ஜனவரி 22 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், வாக்காளர்களின் எண்ணிக்கை, 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து, 2016இல், 2 இலட்சத்தால் அதிகரித்துள்ளதென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டில், வாக்காளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்த மாவட்டமாக, கம்பஹா மாவட்டம் விளங்குவதாகவும் அத்தொகை, 24 ஆயிரமாகக் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்திலேயே வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகின்றதெனவும் அங்கு மூவாயிரம் வாக்காளர்களே, அவ்வருடத்தில் வாக்காளர்களாகப் பதிவாகியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு நிலையில், எதிர்வரும் காலங்களில் நடத்தப்படவுள்ள தேர்தல்களின் போது, கடந்த வருட வாக்காளர்ப் பட்டியலையே பயன்படுத்தவுள்ளதாக, மேலதிக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .