2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

விமானம் தாமதமான விவகாரம்: பயணிகளுக்கு ரூ. 26 மில். நட்டஈடு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியின் ப்ராங்போர்ட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்கா நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான விமானம், குறிப்பிட்ட நேரத்தை விட 15 மணித்தியாலங்கள் தாமதித்துப் பயணித்ததால், அவ்விமானத்தில் பயணித்த 259 பயணிகளுக்கு, 260 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நட்டஈடாக வழங்க வேண்டிய சூழ்நிலை, குறித்த விமானசேவை நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விமானத்தின் விமானி, போதையில் இருந்தமையாலேயே, அவ்விமானம் தாமதமாகியுள்ளது. இந்நிலையில், குறித்த விமானியின் சேவையை, உடனடியாக இடைநிறுத்தவேண்டிய தேவை, விமானச் சேவை நிறுவனத்துக்கு ஏற்பட்டதுடன் அவருக்கான அனுமதிப் பத்திரமும் இரத்துச் செய்யப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X