2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஸ்டெர்லிங் பவுண்டின் பெறுமதி வீழ்ச்சி

Freelancer   / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க டொலருக்கு நிகரான பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாக்குறுதியளித்தமைக்கு அமைய, பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பாரிய வரிக் குறைப்புகளைத் தொடர்ந்து ஸ்டெர்லிங் பவுண்டின் மதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், 1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய அரசாங்கத்தின் வரிக்குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் பவுண்டின் மதிப்பு கடுமையாகக் குறைந்துள்ளது.

அதற்கமைய ஆசிய சந்தையில் ஒரு ஸ்டெர்லிங் பவுண்டின் விலை 1.038 டொலர்களாகக் காணப்பட்டதுடன், அதன் பெறுமதி 4 சதவீத்தால் சரிந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் வெள்ளிக்கிழமை சந்தை நிலவரத்துக்கு அமைய 401.58 ரூபாயாகக் காணப்பட்ட  ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை இன்றையதினம்  376.70 ரூபாயாகக் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

அத்துடன், வெள்ளிக்கிழமையன்று 417.39 ரூபாயாகக் காணப்பட்ட விற்பனை விலையும்  391.95 ரூபாய் என்ற அளவுக்கு இன்றையதினம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X