Editorial / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, பாராளுமன்றத்தில் வைத்து தன்னை அடித்தாரென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டிஆரச்சி, வெலிக்கட பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில், பாராளுமன்றத்துக்குச் சென்ற வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, திஸ்ஸ குட்டிஆரச்சியிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டுள்ளார் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, தனியார் வைத்தியசாலையில் இன்று (22) அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றிருந்த, சி.ஐ.டியினர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் நாளையதினம் விசாரணைக்கு வருமாறு, அவருக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
19 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
38 minute ago