2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

ஹெரோயினுடன் 6 பேர் கைது

Freelancer   / 2025 ஒக்டோபர் 25 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேற்றைய திடீர்  சோதனையின் போது இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஒரு சந்தேகநபரிடம் இருந்து மூன்று கிராம் ஹெரோயினும், ஐந்து பேரிடம் இருந்து வெவ்வேறாக நான்கு கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் சந்தேகநபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X