2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

'அச்சுறுத்தல்களின் விளைவு புதிய அரசியல் கட்சிகளின் தோற்றம்'

Gavitha   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

'அச்சுறுத்தல்கள் விடுக்கப்படும் பட்சத்தில், புதிய அரசியல் கட்சியொன்று உருவாக்கப்படும்' என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அலுவலகர் சங்கத்தின் 19ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை (22) கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'அரசியல் கட்சிகள் உருவாக்கப்படுவதை எந்தவொரு சக்தியாலும் நிறுத்த முடியாது. இது சாதாரண செயற்பாடாகும். புதிய கட்சிகளை உருவாக்குவதற்கு நாட்டில் போதியளவு சுதந்திரம் இருக்க வேண்டும். தங்களது சுய தீர்மானங்களை எடுப்பதற்கு ஒவ்வொரு தனிப்பிட்ட நபருக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். அச்சுறுத்தல்கள் மூலம் புதிய அரசியல் கட்சிகள் உருவாவது நிச்சயம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

'அரசியல் தொடர்புடைய தனி நபருடை சிந்தனைகளை அச்சுறுத்தல்கள் மூலம் மறைக்க முடியாது. கைது செய்து விளக்கமறியலில் வைப்பதன் மூலம், அவர்களுடைய அரசியல் வாழ்க்கைக்கு பாதகமும் ஏற்படாது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலிக்காரணங்களை தெரிவித்து ஜனநாயகத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் ஐ.தே.க.வும் சு.க.வும் அரசாங்கத்தின் கீழ் பிணைந்துள்ளன என்று தெரிவித்த அவர், ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இரு கட்சிகளுக்கிடையில் இரண்டு வருட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு தற்போது அது ஐந்து வருடங்களாக அதிகரிக்கப்பட்டள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X