Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
2017ஆம் நிதியாண்டுக்கான மொத்த அரசாங்கத்தின் செலவீனத்தில், ஜனாதிபதி, பிரதமருக்கான செலவீனங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி மற்றும் பாதுகாப்புக்கான செலவீனங்கள், குறைக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவீனம் தொடர்பான நிதியொதுக்கீட்டுச் சட்டமூலம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால், முதலாம் வாசிப்புக்காக, நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (20) சமர்ப்பிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் உத்தேச செலவீனத்தின் படி, 2017ஆம் ஆண்டுக்கான மொத்த செலவீனமாக, ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 900 கோடியே 50 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில், 2016ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செலவீனமாக,2.392 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2017ஆம் ஆண்டுக்கான செலவீனமாக, 4.06 பில்லியன் ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, ஜனாதிபதிக்கான மொத்த செலவீனமாக, 6.452 பில்லியன் ரூபாய் ஒதுக்கபட்டுள்ளது.
இதேபோன்று, 2016ஆம் ஆண்டுக்கான பிரதமரின் செலவீனமாக, 0.486 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2017ஆம் ஆண்டுக்கான செலவீனம், 0.714 பில்லியன் ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, மொத்தமாக 1.25 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2017ஆம் ஆண்டுக்கான கல்விக்கான ஒதுக்கீடு பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு கல்விக்காக, 185.97 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2017ஆம் ஆண்டில் கல்விக்கான நிதியொதுக்கீடு, 109.03 பில்லியன் ரூபாயால் குறைக்கப்பட்டு, 76.94 பில்லியன் ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, 2016ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவீனமாக, 306.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2017ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவீனம் 22.56 பில்லியன் ரூபாயால் குறைக்கப்பட்டு 284.04 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சுக்கான நிதியொதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டுக்கென, 174.077 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2017ஆம் ஆண்டுக்கு 13.107 பில்லியன் ரூபாய் குறைக்கப்பட்டு 160.97 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
2 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago