2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

26 உடற்பாகங்களுக்கு SAITM ​பொறுப்பல்ல

Gavitha   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பியூமி பொன்சேகா

“பிரபல றக்பி ​விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் காணாமற்போன உடற்பாகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக, மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியிலுள்ள ஆய்வத்திலிருந்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட 26 மனித உடற்பாகங்களுக்கும் சைட்டம் பொறுப்பேற்காது” என்று சைட்டமின் தலைவர் டொக்டர் நெவில் பெர்ணான்டோ நேற்று வியாழக்கிழமை (20) தெரிவித்துள்ளார்.

குறித்த கல்லூரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“பிரபல றக்பி ​விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் காணாமற்போன உடற்பாகங்கள், சைட்டமிலேயே உள்ளது என்று சேறு பூசினர். எமது மருத்துவக்கல்லூரியை பரிசோதிக்குமாறு நான்,பொலிஸ்மா அதிபரிடமும் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கோரிக்​கை விடுத்திருந்தேன். கடந்த 3ஆம் திகதி சைட்டமுக்கு வந்த குற்றப்புலனாய்வு அதிகாரிகள், கற்றைகளுக்காக மாத்திரம் வைக்கப்பட்டிருந்த சில மனித உடற்பாகங்கள் அடங்கிய பெட்டிகளை எடுத்துச் சென்றனர். கொண்டுச் செல்லும்போது, அந்தப் பெட்டிகளில் சைட்டமின் முத்திரை பதித்திருக்கவில்லை. குற்றப்புலனாய்வு பிரிவினரது முத்திரை மாத்திரமே பதியப்பட்டிருந்தது. இதனால், அந்தப் பெட்டிகளுக்குள், றக்பி ​விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் உடற்பாகங்களை போட்டு வைத்துவிட்டு, அவற்றை சைட்டமே வைத்திருந்தது என்று கூறுவர். அதனால், கொண்டுச் செல்லப்பட்ட அந்த 26 மனித உடற்பாகங்களுக்கு நாம் பொறுப்பு அல்ல” என்று அவர் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X