2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

'எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் இரகசியங்களை ஜனாதிபதி வெளியிடவேண்டும்'

Gavitha   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

லஹிரு பொத்துமுல்ல

இணைந்த எதிரணியிலுள்ள அரசியல்வாதிகளின் இரகசியத்தை வெளியிடுமாறு, பிவிதுறு ஹெல உறுமயவில் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில, நேற்று திங்கட்கிழமை (22) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு சவால் விடுத்தார். 

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக, இணைந்த எதிரணியினர் புதியதொரு கட்சியை உருவாக்குவார்களாயின், இணைந்த எதிரணியில் உள்ள சில அரசியல்வாதிகள் குறித்தான இரகசியத்தை வெளியிடுவேன் என்று கடந்த வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற தேசிய அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தியை கொண்டாடும் நிகழ்வின் போது, ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இது தொடர்பில், பிவிதுறு ஹெல உறுமயவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'புதியதொரு கட்சியை உருவாக்குவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை. யார் என்ன தவறு செய்தாலும், புதிய கட்சி குறித்து சிந்திக்காமல், அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அநியாயக்காரர்கள், ஜனாதிபதி சொல்வதை கேட்கும் மட்டும், அவர்களை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளார். இதுவா நல்லாட்சி?' என்று அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.

'இந்த இரகசியங்கள் வெளிவந்தவுடன், தங்கக்குதிரைகள் என்றழைக்கப்படுபவை இருக்கும் இடங்கள், நாமல் ராஜபக்ஷவின் லம்போகினி மற்றும் ஹெலிகொப்டர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கணக்கிலுள்ள 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறித்த மக்கள் கண்டுபிடித்து விடுவர்' என்று அவர் கூறினார். 'அந்த இரகசிய கணக்குக்கும் தங்கக்குதிரைகளுக்கும் என்ன நடந்தது என்பது தொடர்பில் நானும் ஆச்சரியடைந்தேன். இவற்றை பார்க்கும் போது, ஜனாதிபதி விரும்பியே இந்த இரகசியங்களை மறைத்து வைத்திருப்பதாகவே தெரிகின்றது. நாமும் இந்த இரகசியம் குறித்து அறிந்துக்கொள்ள ஆவலாக உள்ளதால், ஜனாதிபதி இந்த இரகசியங்களை வெளியிட வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X